'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
நிதிஷ் திவாரி இயக்கத்தில் அமீர்கான், பாத்திமா சனா ஷேக், சான்யா மல்கோத்ரா, சாயிரா வாசிம் மற்றும் பலர் நடிக்க 2016ம் ஆண்டு டிசம்பரில் இந்தியாவில் வெளியான படம் தங்கல். விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு, ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 750 கோடி ரூபாயை வசூலித்தது.
ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளிவந்த பாகுபலி 2 திரைப்படம் தங்கல் படத்தின் 750 கோடி ரூபாய் சாதனையை முறியடித்து 1000 கோடி ரூபாய் வசூலைக் கடந்தது. அந்த சமயத்தில் தங்கல் படம் சீனாவில் வெளியாகியது. அங்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சீன ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற தங்கல் படம் சீக்கிரத்திலேயே பாகுபலி 2 சாதனையை முறியடித்து உலக அளவில் அதிக வசூலைப் பிடித்த இந்தியப் படம் என்ற சாதனையைப் பெற்றது.
பாகுபலி 2 படத்தின் வசூல் தற்போது குறைந்துவிட்டது. ஆனால், சீனாவில் வெளியான தங்கல் படம் இன்னமும் 6000க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போதைய சீன வசூல் 1250 கோடியைக் கடந்ததையடுத்து 2000 கோடியைக் கடந்த முதல் இந்தியப் படம் என்ற பெருமையை தங்கல் படம் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல சீனாவில் அதிகம் வசூலித்த ஆங்கிலம் அல்லாத படங்களில் முதல் 5 இடங்களில் தங்கல் படமும் இடம் பெற்றுவிட்டது.
பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையில் நொந்து போயிருந்த பாலிவுட்டினர் தற்போது தங்கல் படத்தின் வசூல் சாதனையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தங்கல் படத்தின் வசூலை சீனாவில் வெளியாகும் போது பாகுபலி 2 கடக்குமா என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பாக இந்திய ரசிகர்களுக்கு இருக்கும்.