ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கடந்த மேமாதம் துல்கர் சல்மான் நடித்த 'காம்ரேட் இன் அமெரிக்கா (சி.ஐ.ஏ) படம் வெளியானது. அமல் நீரத் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் துல்கர் சல்மான் கம்யூனிஸ்ட் இளைஞனாக நடித்திருந்தார் என்றாலும், காதலும், காதலுக்கான ஆபத்தான வெளிநாட்டு பயணமும் தான் படத்தின் கதை.. அதை ரொமான்ஸ், காமெடி ஆக்சன் என கலந்து படமாக்கியிருந்தார் அமல் நீரத். இந்தப்படம் வெளியானபோது 'பாகுபலி-2' அலை வீசிக்கொண்டு இருந்தாலும் கூட இப்போது வரை கேரளாவில் சில தியேட்டர்களில் நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இன்னும் இரண்டு தினங்களில் இந்தப்படம் 50வது நாளை தொடப்போகிறது. இதை கொண்டாடும் விதமாக இந்தப்படத்திற்கு ஸ்பெஷலாக புதிய டிரைலர் ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர். படம் வெளியாகும் வரை டிரைலரையே கண்ணில் காட்டாமல் படத்தை வெளியிடும் ஒரு சிலர் மத்தியில் படத்தின் ஐம்பதாவது நாளுக்கு கூட டிரைலர் வெளியிடுவது ஆச்சர்யமான விஷயம் தான்.