நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
1987-ம் ஆண்டு, ஸ்ரீதேவி - அனில் கபூர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பிளாக்பஸ்டர் படம் மிஸ்டர் இந்தியா. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்தார். மிஸ்டர் இந்தியா-2 உருவாக இருப்பதாக நீண்டகாலமாகவே செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதுப்பற்றி சமீபத்தில் மாம் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்ரீதேவியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது.... "மிஸ்டர் இந்தியா-2 எப்போது உருவாகும் என்று கேட்காதவர்கள் இல்லை. இந்தப்படத்திற்கு இப்படியொரு எதிர்பார்ப்பு இருக்கும் என்று நினைக்கவில்லை, நிச்சயம் இரண்டாம் பாகம் உருவாகும். என் கணவரே தயாரிப்பார் என நம்புகிறேன். ஆனால் படத்திற்கான கதை இன்னும் முடிவாகவில்லை. ஆகையால் இப்படம் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது" என்றார்.
ஸ்ரீதேவி நடித்துள்ள மாம் படம் வருகிற ஜூலை 7-ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸாக உள்ளது.