சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
ஜேஎஸ்கே ஃபிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் லியோ விஷன் ராஜ்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் அண்டாவ காணோம். ஸ்ரேயா ரெட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் வேல்மதி இயக்கியிருக்கிறார். இப்படத்தின் படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய ஸ்ரேயா....
9 ஆண்டுகள் கழித்து மீண்டும் நான் நடிக்க வந்திருக்கும் படம் இது. இயக்குனர் கதை சொன்னபோது எனக்கு புரியவே இல்லை. திமிரு அளவுக்கு இருக்குமா எனக் கேட்டேன். இயக்குனர் மிகவும் தன்னம்பிக்கையோடு திமிரு பத்தி பேசாதீங்க, இது உங்களோட மிகச்சிறந்த படமாக இருக்கும்னு சொன்னார். நீங்க ஒண்ணும் தயாராக வேண்டாம், நேராக ஷூட்டிங்க்கு வாங்க என்றார். மிகவும் பொறுமையாக பக்கத்தில் உட்கார்ந்து மதுரை வட்டார வழக்கை சொல்லி கொடுத்தார். ஜேஎஸ்கே இல்லைனா இந்த படம் வெளிய வந்திருக்காது என்றார் நாயகி ஸ்ரேயா ரெட்டி.