மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? |
தமிழில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக போகன் படத்தில் நடித்த ஹன்சிகா அதன்பிறகு கொடிவீரன், சங்கமித்ரா ஆகிய படங்களில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவரது மார்க்கெட் சரிவடைந்துள்ளதால் அந்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. அதனால் தற்போது மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் வில்லன், தெலுங்கில் கோபிசந்த் நடிக்கும் கெளதம் நந்தா ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா.
இதில் கோபிசந்துடன் நடித்துள்ள கெளதம் நந்தா படம் ஜூலை 7-ந்தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தில் கேத்ரின் தெரசாவும் இன்னொரு நாயகியாக நடித்தபோதும் ஹன்சிகாவுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். மேலும், இந்த படத்தில் அவருக்கு பர்பாமென்சுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதனால் அப்படத்தின் பப்ளிசிட்டிகளில் அவரது புகைப்படங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன