'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
'36 வயதினிலே', 'பசங்க 2', '24' என சூர்யாவின் '2டி என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தயாரித்த படங்கள் எதுவுமே கமர்ஷியலாக பெரிய வெற்றியடையவில்லை. இந்நிலையில் இந்தப் படங்களைத் தொடர்ந்து சூர்யா தயாரித்துள்ள படம் 'மகளிர் மட்டும்'.
'குற்றம் கடிதல்' படத்தை இயக்கிய பிரம்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ஜோதிகா நடித்துள்ளார். பானுப்ரியா, ஊர்வசி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் மூன்று முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆவணப்பட இயக்குநராக ஜோதிகா நடித்துள்ள இந்தப் படம் பெண் உரிமை பற்றிப் பேசும் படமாம். இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை ரிலீஸ் செய்வதற்கான் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன.
மகளிர் மட்டும் படத்தின் தணிக்கையும் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர், 'மகளிர் மட்டும்' அனைவரும் பார்க்கக் கூடிய படம் என்று யு சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.