மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜூன் நடித்துள்ள படம் நிபுணன். அவருடன் பிரசன்னா, சுகாசினி, வரலட்சுமி, வைபவ், ஸ்ருதி ஹரிஹரன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் அர்ஜூனின் 150வது படமாகும். இந்த படம் தெலுங்கில் குருக்சேத்ரம் என்ற பெயரில் வெளியாகிறது. இதன் டீசர் நேற்று ஐதராபாத்தில் வெளியிடப்பட்டது.
அப்போது அர்ஜூன் பேசுகையில், நான் சினிமாவில் 36 வருடங்களாக நடித்து வருகிறேன். இந்த குருக்சேத்ரம் படம் எனது 150வது படமாகும். இது எனது கேரியரில் ஒரு மைல்கல் படமாக அமையும். மேலும், ஜெய்ஹிந்த்-2 படத்திற்கு பிறகு நான் லீடு ரோலில் நடிக்கும் படம் இது. வித்தியாசமான கதை. இந்த படத்தின் கதை என்னை கவர்ந்ததினால்தான் நடிக்க சம்மதித்தேன். இப்படத்தின் திரைக்கதை ஹைலைட்டாக இருக்கும் என்றார்.