ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' |
பிரபல தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் தம்பி பரத் (வயது 49) இவரும் நடிகர்தான். சமீபத்தில் சினிமாவுக்கு அறிமுகமாகி 5 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு பரத் தனது காரில் ஷாம்சாபாத் நகரிலிருந்து ஐதராபத்தில் உள்ள கச்சிபவ்லிபாத்துக்கு சென்றார். காரை அவரே ஓட்டிச் சென்றார். பைபாஸ் சாலையில் கார் வேகமாக சென்றபோது சாலையின் ஓரத்தில் பழுதாகி நின்ற லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பரத் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
விபத்து பற்றி கேள்விப்பட்டதும் ஷாம்சாபாத் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பரத் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டது. இது தொடர்பாக எச்சரிக்கை போர்டு வைக்காமல் லாரியை நிறுத்தி வைத்திருந்த டிரைவரை கைது செய்தனர். பரத் போதையில் கார் ஓட்டினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.