வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் |
இப்போதெல்லாம் எண்களில் படத்திற்கு பெயர் வைக்கிற டிரண்ட். விஜய் சேதுபதி, திரிஷா நடிக்கும் படத்திற்கு 96 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 1818 என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. இந்த நிலையில் 143 என்ற எண்ணில் ஒரு படம் தயாராகி வருகிறது. ஐ டாக்கீஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் சதீஷ் சந்திரா தயாரிக்கிறார். ரிஷி என்ற புதுமுகம் இயக்கி நடிக்கிறார். பிரியங்கா சர்மா, நட்சத்திரா என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். இவர்கள் தவிர விஜயகுமார், கே.ஆர்.விஜயா ஆகியோரும் நடிக்கிறார்கள். ராஜேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் பாஸ்கர் இசை அமைக்கிறார். படம் பற்றி ரிஷி கூறியதாவது:
காதலர்களின் சங்கேத வார்த்தையாக கருதப்பட்ட 143 அதாவது I Love You வார்த்தைகளின் சுருக்கமே 143. அமாவாசை அன்று பிறந்த நாயகன் கார்த்திக், பெளர்ணமி அன்று பிறந்த நாயகி மது. இவர்கள் காதலுக்கு வில்லனாக சூரியன். இப்படி மூன்று கதாபாத்திரங்களின் ஓட்டமே இந்தப்படத்தின் திரைக்கதையாக்கம். படம் ஒரு வித்தியாசமான உணர்வை ஏற்படுத்தும். படப்பிடிப்பு ஐதராபாத், சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. என்றார் இயக்குனரும் நடிகருமான ரிஷி.