Advertisement

சிறப்புச்செய்திகள்

டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாக்கடை சகதியில் முழ்கி எழுந்த கோடீஸ்வர ஹீரோ

26 ஜூன், 2017 - 10:43 IST
எழுத்தின் அளவு:
A-billion-hero-fight-in-Mud

உலக புகழ்பெற்ற ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதி, இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழில் இயக்கும் படம் பியாண்ட் த க்ளவுட்ஸ். இதில் பிரபல இந்தி நடிகர் ஷாகித் கபூரின் தம்பி மகன் இஷான் கட்டார், மும்பை தாராவி சேரிப் பையனாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

படத்தில் இஷானை சாக்கடை சகதியில் போட்டு இரண்டு வில்லன்கள் புரட்டி எடுப்பது மாதிரியான காட்சி படமாக்கப்பட வேண்டியது இருந்தது. ஹீரோ கோடீஸ்வர வீட்டு பிள்ளை என்பதால் அவரை எப்படி சாக்கடையில் மூழ்க சொல்வது என்று படத் தயாரிப்பாளர்கள் தயங்கினர். ஆனால் இயக்குனர் மஜித் மஜிதி சகதியில் முழ்கி தான் ஆக வேண்டும் டூப் வைத்து படம் எடுத்து பழக்கமில்லை என்று கூறிவிட்டார். இதை கேள்விப்பட்ட இஷான் கட்டார் துணிச்சலுடன் சகதியில் முழ்கி நடித்தார்.

இதுகுறித்து படத் தரப்பினர் கூறியதாவது: திரைக்கதையில் ஒரு முக்கியமான காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்த காட்சியின் படி இஷான், சேறும் சகதியுமாக இருக்கும் ஒரிடத்தில் பல முறை அவர் மூழ்கி எழ வேண்டும். அவர் முகம் முழுவதும் சேறாக இருக்க வேண்டும். இதற்காக படப்பிடிப்பு மும்பையில் உள்ள ஸீவ்ரி ஜெட்டி என்ற பறவைகள் சரணாலயப் பகுதியில் நடைபெற்றது. இந்த காட்சியைப் பற்றி இயக்குநர் விளக்கி கூறியதும், எந்தவொரு மறுப்பும் சொல்லாமல், சற்றும் தயங்காமல் சேற்றில் குதித்தார். இந்த காட்சி சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக 64 முறை சேற்றில் மூழ்கி எழும் பயிற்சியை மேற்கொண்டார்.

அதன் பின்னர் காட்சியில் அற்புதமாக நடித்தார். அதன் போது அவரின் முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு சேற்றால் நிறைந்திருந்தது. இயக்குநர் எதிர்பார்க்கும் அளவிற்கு காட்சி சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக இஷானின் இந்த அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பை இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் பாராட்டினர் என்றார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in