அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்து சினிமாவில் ஜெயிக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருப்பவர்களில் முக்கியமானவர் மா.கா.பா.ஆனந்த். அவர் தற்போது நடித்து வரும் படம் மாணிக். இது பாட்ஷா படத்தில் ரஜினியின் பெயர். மா.கா.பா.ஆனந்துக்கு ஜோடியாக சூஷா குமார் நடிக்கிறார். வத்சன், அனு இன்னொரு நாயகன், நாயகியாக நடிக்கிறார்கள். இவர்கள் தவிர அருள்தாஸ், புஜ்ஜிபாபு, சீதா, ஜாங்கிரி மதுமிதா, சிவசங்கர், மனோபாலா உள்பட பலர் நடிக்கிறார்கள். மார்டின் இயக்குகிறார். தரண் இசை அமைக்கிறார், எம்.ஆர்.பழனிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்புகள் முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகிறது.
படம் பற்றி இயக்குனர் மார்ட்டின் கூறியதாவது: ஆசிரமத்தில் வளர்ந்த ஹீரோ மா.கா.பா.ஆனந்த் மற்றும் இரண்டாவது ஹீரோ வத்சன் இருவரும் ஒரு விஷயத்தில் பெரிய அளவில் சாதிக்க ஆசிரமத்தில் இருந்து கிளம்புகிறார்கள், அப்படி அவர்கள் சாதிக்க நினைத்தது என்ன, அந்த சாதனை முயற்சியில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், இறுதியில் நினைத்ததை சாதித்தார்களா இல்லையா என்பதை பேண்டசியாக சொல்லியிருக்கிறோம். அவர்களின் சாதனை பயணம் எந்த விஷயத்திற்காக என்பது சஸ்பன்ஸ். என்றார்