ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி, பின்னர் மிரட்டலான வில்லனாக நடித்து வந்தவர் ஆனந்தராஜ். ஏராளமான படங்களில் நடித்த அவர், சமீபகாலமாக காமெடி கலந்த கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அவர் காமெடி கேங்ஸ்டராக நடித்து கடந்த வாரம் வெளியான படம் மரகத நாணயம். இந்த படம் வெற்றி பெற்றிருப்பதை அடுத்து நேற்று அப்படத்தின் சக்சஸ் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது. அப்போது படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதோடு, மீடியாக்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆனந்த ராஜூம் நன்றி தெரிவித்து பேசினார். ஆனால் சக்சஸ் என்று சொல்வதற்கு பதிலாக செக்சஸ் என்று அடிக்கடி உச்சரித்தார். அதைக்கேட்டு அரங்கத்தில் இருந்த அனைவரும் பலமாக சிரித்தனர். என்றாலும் மீண்டும் மீண்டும் அவருக்கு அந்த செக்சஸ் என்ற வார்த்தையே வந்தது. ஒருகட்டத்தில், சக்சஸ் என்பதை கஷ்டப்பட்டு உச்சரித்த ஆனந்தராஜ், தயவு செய்து இந்த வார்த்தையை வைத்து யாரும் என்னை கலாய்த்து விடாதீர்கள் என்று மீடியாக்களிடம் கெஞ்சிக்கேட்டுக் கொண்டார்.