பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெறி படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மெர்சல். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரன்டிங் செய்யப்பட்டது. மேலும், இதற்கு முன்பு இரண்டு வேடங்களில் நடித்துள்ள விஜய், முதன்முறையாக இந்த படத்தில மூன்று வேடங்களில் அப்பா-மகன்கள் என நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காஜல்அகர்வால், சமந்தா ஆகியோர் நடிக்க, சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், தமிழக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அற வழி போராட்டத்தை ஏற்படுத்திய ஜல்லிக்கட்டு கதை பின்னணியில் இந்த படம் தயாராகியிருக்கிறது. அதன் காரணமாக இந்த மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது. அதோடு, ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படம் தெலுங்கில் ஆதிரிண்டி என்ற பெயரில் டப்பிங் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று அப்படத்தின் போஸ்டர் ஆந்திராவில் வெளியிடப்பட்டுள்ளது.