தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு கதையில் தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் படம் மகாநதி. இந்த படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமந்தா பத்திரிகையாளர் வேடத்திலும், சாவித்ரியின் நிஜ வாழ்க்கை கணவரான ஜெமினி கணேசன் வேடத்தில் மலையாள நடிகர் துல்கர்சல்மான் நடித்து வருகிறார். மேலும், விஜய் தேவராக்க என்ற தெலுங்கு நடிகரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும், நடிகை சாவித்ரி நடித்து வந்த காலகட்டத்தில் தெலுங்கு நடிகரான என்.டி.ராமாராவும் முன்னணி நடிகராக இருந்தவர், என்பதோடு அவர் நடித்த தெலுங்கு படங்களிலும் சாவித்ரி நாயகியாக நடித்திருக்கிறார். அதனால், அந்த படங்களில் நடித்தபோது நடந்த சில நிகழ்வுகளும் இந்த மகாநதி படத்தில் இடம் பெறுகிறதாம். அதனால் என்.டி.ராமாராவ் சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிக்க ஜூனியர் என்டிஆரை நடிக்க அணுகியபோது, சம்மதம் தெரிவித்துள்ளாராம். ஆக, இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் கெஸ்ட் ரோலில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.