மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
சல்மான் கான், சோகைல் கான், சீன நடிகை சூ சூ, மாஸ்டர் மார்ட்டின் ரே டங்கு உள்ளிட்ட பலர் நடிக்க நேற்று வெளியான ஹிந்திப் படம் 'டியூப்லைட்'. இந்தப் படத்திற்கு விமர்சகர்கள் மிகவும் மோசனமான விமர்சனங்களை வழங்கியுள்ளனர். மனவளர்ச்சி குன்றியவராக சல்மான் கான் இந்தப் படத்தில் நடித்துள்ளார். எப்போதுமே தான் நடிக்கும் கதாபாத்திரத்தில் ரசிகர்களைக் கவரும் சல்மான் கானுக்கு இந்தக் கதாபாத்திரத்தில் நடிக்கவே தெரியவில்லை என கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.
நேற்று ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சல்மான்கானிடம் 'டியூப்லைட்' விமர்சனம் பற்றிய கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். அப்போது பேசிய சல்மான்கான், “படத்திற்கு - 3, - 4 என்று ரேட்டிங் வழங்குவார்கள் என்று எதிர்பார்த்தேன். பரவாயில்லை, நான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வழங்கியிருக்கிறார்கள். இது ஒரு எமோஷனலான படம்.
இந்த ரம்ஜான் விடுமுறையில் தியேட்டர்களுக்கு வரும் மக்கள் வழக்கமான சல்மானை எதிர்பார்த்திருப்பார்கள். ஆனால், ஒரு வித்தியாசமான சல்மானை அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். தியேட்டருக்கு வருபவர்கள் நான் திரையில் அழுவதைப் பார்த்து விமர்சனம் செய்கிறார்கள். தியேட்டருக்கு வரும் மக்கள் சிரிக்கிறார்களா என்று கேட்டேன், இல்லை அவர்களும் அழுகிறார்கள் என்றார்கள்.
'டியூப்லைட்' வழக்கமான ஒரு படம் அல்ல. கல் மனதையும் கரைய வைக்கக் கூடிய ஒரு படம். தாத்தா, பாட்டி, பெற்றோர்கள், குடும்பத்தில் உள்ள அனைவருடனும் பார்க்க வேண்டிய ஒரு படம் இது. எப்போதுமே எல்லா படங்களுக்கும் இரு வேறு விதமான விமர்சனங்கள் வருவது வழக்கம். என் முகத்தைப் பார்த்தால் கவலையாகவா இருக்கிறது. நிச்சயம் இந்தப் படம் நல்ல வரவேற்பையும், வசூலையும், பெயரையும் பெற்றுக் கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது,” என்று உறுதியாகப் பேசினார்.