Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் கார்த்திக் சுப்புராஜ்

24 ஜூன், 2017 - 10:32 IST
எழுத்தின் அளவு:
Karthick-Subburaj-turn-as-producer

பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். அதன் பிறகு ஜிகிர்தண்டா, இறைவி படங்களை இயக்கினார். குறும்படங்களின் மார்க்கெட்டிங் மற்றும் குறும்படங்களை மக்களின் பார்வைக்கு எடுத்துச் செல்லும் விதமாக ஸ்டோன் பென்ஞ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். தற்போது இதனை சினிமா தயாரிப்பு நிறுவனமாக மாற்றி உள்ளார் இந்த நிறுவனத்தின் மூலம், திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியல்களை தயாரிக்கிறார்.

இதன் தொடக்க விழா நேற்று நடந்தது. இயக்குனர்கள் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோர் தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் இயக்குனர் சங்கத் தலைவர் விக்ரமன், இயக்குனர் லிங்குசாமி, எஸ்.ஜே.சூர்யா, பிரபுதேவா, தியாகராஜன் குமாரராஜா, பாலாஜி தரணிதரன், நலன் குமாரசாமி, பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தனது தயாரிப்பு நிறுவனம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது:

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் கடந்த 2014ல் தொடங்கி, பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என்கின்ற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. முதன்முதலில் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக 2015ல் பெஞ்ச் டாக்கீஸ் என்கின்ற பெயரில் 5 குறும்படத்தை இணைத்து அவியல் என்ற திரைப்படமாக வெளியிட்டது. தற்பொழுது வெள்ளித்திரையிலும், டிஜிட்டல் உலகிலும் கால்பதித்து இரண்டு திரைப்படத்தினையும், வெப் சீரீஸ் ஒன்றினையும் தயரித்துள்ளது.

முதலாவதாக 'மேயாத மான்' எனும் படத்தினையும் பின்பு “மெர்குரி” எனும் திரைபடத்தையும், கள்ளசிரிப்பு எனும் வெப் சீரீஸ்சும் தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளது. மேயாத மானில் நடிகர் வைபவ் நடிக்க நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளனர். புதுமுக இயக்குனர் ரத்தினகுமார் இயக்க, புதுமுக ஒளிப்பதிவாளர் விது ஒளிபதிவு செய்து திரு. சந்தோஷ் நாராயணன் மற்றும் திரு. பிரதீப் குமார் இசையமைத்துள்ளனர்.

இரண்டாவதாக நான் இயக்கும் 'மெர்குரி' எனும் படத்தை ஸ்டோன் பென்ஞ் தயாரிக்கிறது. பிரபுதேவா நடிக்கிறார். படத்தினை தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் திரு ஒளிப்பதிவு செய்து சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

கள்ளசிரிப்பு எனும் வெப் சீரீஸ் ரோஹித் எழுதி நடித்துள்ளார் அவருடன் அம்ருதா, சீனுமோகன் மற்றும் பலர் நடித்துள்ளனர். புதுமுக ஒளிப்பதிவாளர் தினேஷ் ஒளிபதிவு செய்துள்ளார். சதீஷ் இசையமைத்துள்ளார். சோமசேகர் மற்றும் கல்ராமன் போன்ற புதிய அணியுடன் இனைந்து பணியாற்றுவதில் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் பெருமையும் நல்ல மகிழ்ச்சியும் அடைகிறது. என்றார் கார்த்திக் சுப்புராஜ்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in