டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள "டியூப்லைட்" படம் இன்று(ஜூன் 23-ம் தேதி) உலகம் முழுக்க சுமார் 5550 தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. முன்னதாக இப்படத்தை இருதினங்களுக்கு முன்னர் வரை பம்பரமாய் சுழன்று புரொமோஷன் செய்தார் சல்மான். அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு உதட்டு முத்தக்காட்சி சரிவராது என்றார். இதற்கான காரணம் குறித்து அவர் கூறியதாவது...
"நான் சிறுவனாக இருந்தபோது குடும்பத்தாருடன் அமர்ந்து ஒரு ஆங்கில படம் பார்க்க நேர்ந்தது. அப்போது, அந்தபடத்தில் நடித்த ஒரு ஜோடி முத்தக்காட்சியில் நடித்தனர். குடும்பத்தாருடன் அமர்ந்து பார்க்கும் போது எனக்கு அது சங்கடமாக இருந்தது, ஆகையால், நானும் படத்திலும் அப்படி நடிப்பதை தவிர்த்தேன். அது எனக்கு சரிவராது" என்றார்.