பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரித்துள்ள 'கூட்டத்தில் ஒருத்தன்' படம் ரெடியாகி மாதக்கணக்கில் காத்திருக்கிறது. அசோக் செல்வன், பிரியா ஆனந்த் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கியுள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார்.
'கூட்டத்தில் ஒருத்தன்' படம் கமர்ஷியலான படம் இல்லை என்பதால் மற்ற கமர்ஷியல் படங்களோடு ரிலீஸ் செய்யாமல் தனியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என்று காத்திருந்தார் தயாரிப்பாளர். ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேல் காத்திருந்தும் கூட்டத்தில் ஒருவன் படத்தை வெளியிடும் சூழல் அமையவே இல்லை.
இந்நிலையில், ஜூலை 14-ஆம் தேதி அன்று வேறு படங்கள் வெளியாகவில்லை என்பதை உறுதி செய்து கொண்டு அன்றைய தினத்தில் கூட்டத்தில் ஒருவன் படத்தை வெளியிட திட்டமிட்டனர். இந்நிலையில், அதே ஜூலை 14-ஆம் தேதியில் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தை வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளனர்.
அதர்வா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கெசண்ட்ரா, பிரணிதா, அதிதி என நான்கு கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள்.
'ஓடம்' இளவரசு இயக்கியுள்ள இந்தப் படத்தை 'அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரித்துள்ளார்.