'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஜனதா கேரேஜ் படத்தைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர் நடித்து வரும் படம் ஜெய் லவகுசா. பாபி இயக்கும் இந்த படத்தில் ராசிகண்ணா, நிவேதா தாமஸ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கிறார்கள். செப்டம்பர் 1-ந்தேதி இந்த படம் திரைக்கு வரயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில் நடிக்கிறார் ஜூனியர் என்டிஆர். ஜெய், லவகுமார், குசால்குமார் என அவர் நடிக்கும் மூன்று வேடங்களுக்கும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தை தனது கேரியரில் முக்கியமான படமாக கருதும் ஜூனியர் என்டிஆர், ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் வித்தியாசமான மேனரிஸத்தை வெளிப்படுத்தி நடித்துக்கொண்டிருக்கிறாராம்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரியஅளவில் வரவேற்பு பெற்றதை அடுத்து, படத்தின் டீசருக்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்த நிலையில், ஜெய் லவகுசா படத்தின் டீசர் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியாகயிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் கல்யாண்ராம் நேற்று அறிவித்துள்ளார்.