விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் |
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் வாரிசு என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் விஜய். 16 வயதில் சினிமாவில் அறிமுகமாகி இன்று 60 படங்களை தாண்டி நிற்கிறார் விஜய். விஜய்யின் திரை பயணத்தில் வெற்றி, தோல்வி சம அளவில் தான் இருக்கின்றன. இன்று(ஜூன் 22-ம் தேதி) நடிகர் விஜய் தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
வழக்கமாக தனது பிறந்தநாளில் ரசிகர்களை சந்திக்கும் விஜய், கடந்த சில ஆண்டுகளாக தவிர்த்து வருகிறார். இந்தாண்டும் அவர் ரசிகர்களை சந்திக்கவில்லை. குடும்பத்துடன் பொழுதை கழித்து வருகிறார்.
ஆனால், விஜய் ரசிகர்கள் வழக்கம்போல் ரத்த தானம், நலத்திட்ட உதவிகள் என கொண்டாடி வருகின்றனர். அதோடு விஜய்யின் 61வது படத்தின் தலைப்பு மெர்சல் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள், இந்த பிறந்தநாளை மெர்சலாக கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில் மெர்சல் தான் டிரெண்ட்டிங்கில் உள்ளது.
திரைபிரபலங்கள் வாழ்த்து : விஜய்யின் பிறந்தநாளையொட்டி நிவின் பாலி, காஜல் அகர்வால், சிவகார்த்திகேயன், தனுஷ், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட திரைப்பிரபலங்கள் அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள்.