'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
16 வயதில் சினிமாவில் அறிமுகமாகி இன்று 60 படங்களை தாண்டி நிற்கிறார் நடிகர் விஜய். படம் வெற்றியோ தோல்வியோ தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை தராதா பக்கா கமர்ஷியல் ஹீரோவாக வளர்ந்து நிற்கிறார். இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேரின் மகன் என்கிற அடையாளம் அவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு பயன்பட்டிருக்கலாம். ஆனால் அவர் வளர்ந்தது, இந்த உயரத்தை பிடித்தது எல்லாமே அவரது சொந்த உழைப்பினால்தான்.
1993ம் ஆண்டு வெளிவந்த செந்தூரப்பாண்டி படத்தில்தான் விஜய்க்கு இளைய தளபதி என்று டைட்டில் கார்டு போடப்பட்டது. அப்போது ரஜினி நடித்த தளபதி படம் வெளிவந்த நேரம். விஜய், ரஜினியின் தீவிர ரசிகர் என்பதால் அந்த படத்தின் பெயரை இணைத்து இளைய தளபதி பட்டம் போடப்பட்டது. அந்த பட்டமே அவருக்கு நிலைத்து விட்டது. இளைய தளபதி பட்டம் போடும்போது அவருக்கு வயது 20. ஆனால் இப்போது 40 வயதை கடந்து விட்டார். இப்போதும் அவரை இளைய தளபதி என்றால் பொருத்தமாக இருக்குமா? இதனால் தளபதி ஆகிவிட்டார்.
விஜய்யின் பிறந்த நாளையட்டி நேற்று வெளியிடப்பட்ட அவரது 61வது படமான மெர்சல் படத்தின் முதல் பார்வை போஸ்டரில் அவரது பட்டம் தளபதி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. இனி அவர் அவ்வாறே குறிப்பிடப்படுவார். ரசிகர்களால் அவ்வாறே அழைக்கப்படுவார்.
ஒரு காலத்தில் காதல் இளவரசன் என்பதுதான் கமல்ஹாசனின் பட்டம். 60 வயதை தாண்டிய பிறகும் எப்படி காதல் இளவரசனாக இருக்க முடியும் என்று கமல் அந்த பட்டத்தை சமீபத்தில் ஆர்யாவுக்கு கொடுத்தார். ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டியதும் காதல் இளவரசன் பட்டம் மறைந்து உலக நாயகன் ஆனது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய அம்சம்.