தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மோகன்லால் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் படம் தான் வில்லன். பி.உன்னிகிருஷ்ணன் மோகன்லாலை வைத்து நான்காவது முறையாக இயக்கும் இந்தப்படத்தில் விஷால், ஹன்ஷிகா இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்தும் இதில் இருக்கிறார். இதில் ரிட்டையர்டு போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன்லாலுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். இந்தப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை 50 லட்ச ரூபாய் கொடுத்து கைப்பற்றியுள்ளது ஜங்லீ மியூசிக் நிறுவனம். இது மோகன்லால் பட ஆடியோ ரைட்ஸில் அதிகபட்சமான தொகையாகும். அதுமட்டுமல்ல, இந்தப்படத்தின் ரைட்ஸை வாங்கியதன் மூலம் மலையாள திரையுலகிலும் தனது எல்லையை விரிவுபடுத்துகிறது ஜங்லீ மியூசிக். சுஷின் ஷ்யாம் என்பவர் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.