ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழில் வெளியான தோல்விப்படங்களில் ஒன்று சாந்தனு நடித்த சக்கரக்கட்டி. தாணுவின் மகன் கலாபிரபு இயக்கிய இந்தப் படத்திற்கு சூப்பர்ஹிட் பாடல்களை போட்டுக் கொடுத்தார் ஏ.ஆர்.ரகுமான். பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியும் படம் தேறவில்லை.
அதன்பிறகு காணாமல் போன கலாபிரபு, பல வருடங்களுக்குப் பிறகு கௌதம் கார்த்தியை வைத்து இந்திரஜித் என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார். கடந்த சில வருடங்களாக இந்தப் படத்தின் படப்பிடிப்பு அவ்வப்போது நடைபெற்று வந்தது. சுமார் ஆறேழு மாதங்களுக்கு முன் படம் ரெடியாகிவிட்டது.
கௌதம் கார்த்திக் நடித்த முத்துராமலிங்கம் படம் ஒருநாள் கூட ஓடவில்லை. எனவே இந்திரஜித் படத்துக்கு விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் மத்தியில் ஆர்வமோ, ஆதரவோ இல்லாமல் போனது.
இந்நிலையில் கௌதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படம் வெற்றியடைந்தால், சூட்டோடு சூடாக இந்திரஜித் படத்தையும் ரிலீஸ் செய்ய நினைத்தார் தயாரிப்பாளர். அவர் எதிர்பார்ப்புக்கு மாறாக ரங்கூன் படம் கமர்ஷியலாக பெரிய வெற்றிபடமாக ஓடவில்லை. எனவே, கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள இவன் தந்திரன் படத்தின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கிறார் தயாரிப்பாளர். இவன் தந்திரன் ஓடினால் தான் இந்திரஜித் படம் திரைக்கு வரும். இல்லை என்றால் இன்னும் சில மாதங்கள் காத்துக்கிடப்பதைத் தவிர வேறுவழியில்லை.