ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு படத்தின் தழுவலாகவோ, காப்பியடித்தோ வேறு மொழிகளில் படங்கள் உருவாவது அடிக்கடி நடக்கும் விஷயம்தான். சமீபகாலமாக இந்த தழுவல், காப்பி ஆகியவை பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன. சமூக வலைத்தளங்களில் எதிலிருந்து தழுவப்பட்டது, காப்பியடிக்கப்பட்டது என்பது உடனுக்குடன் பரவி விடுவதால் அப்படி படம் எடுப்பவர்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிடுகிறது.
சல்மான் கான் நடித்து விரைவில் வெளிவர உள்ள 'டியூப்லைட்' படத்தின் டிரைலரில் சல்மானின் கதாபாத்திரத்தைப் பார்க்கும் போது 'தெய்வத் திருமகள்' படத்தில் விக்ரமைப் பார்ப்பது போலவே இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த ஹிந்திப் படமான 'ராப்டா' படம் தெலுங்கில் வெளிவந்த 'மகதீரா' படத்தின் காப்பி என வழக்கு தொடுக்கப்பட்டு பின்னர் சமாதானம் ஆனார்கள்.
அடுத்து அர்ஜுன் கபூர், அனில் கபூல், இலியானா ஆகியோர் நடிப்பில் வெளிவர உள்ள 'முபாரக்கன்' படத்தின் டிரைலரைப் பார்க்கும் போது அந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில் பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் நடித்து வெளிவந்த 'ஜீன்ஸ்' படத்தின் காப்பியோ என யோசிக்க வைக்கிறது.
ஒரு வேளை ஹிட்டான தமிழ்ப் படங்களின் கதாபாத்திரங்களை மட்டும் வைத்துக் கொண்டு, கதையைக் கொஞ்சம் மாற்றி படமாக்குகிறார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது.