ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இன்று சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. நாட்டின் பெரும் தலைவர்கள் முதல் சாதாரண மக்கள் வரை பலரும் யோகா செய்வதை தங்களது தினசரி உடற்பயிற்சியாக வைத்துள்ளனர். மனதுக்கும் உடலுக்கு யோகா மிகவும் நல்லது என்று ஆண்டாண்டு காலமாக மக்களிடம் பயிற்றுவிக்கப்படுகிறது.
ஒரு யோகா பயிற்சியாளராக இருந்து இன்று முன்னணி நாயகியாக உயர்ந்திருக்கும் அனுஷ்கா, சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று முகப்புத்தகத்தில் தனது யோகா அனுபவத்தைப் பதிவிட்டிருக்கிறார்.
“என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்றால் நான் யோகாவை பயிற்சி அளிக்க எடுத்த முடிவுதான். டாக்டர்கள், இஞ்சினியர்கள் உள்ள குடும்பத்திலிருந்து வந்தவள் நான். யோகாவுக்காச் செல்ல வேண்டுமென்று நான் எடுத்த முடிவு ஒரு தைரியமான முடிவு, அது என்னுடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது, இப்போது இருக்கும் அதுதான் பொறுப்பாகவும் இருக்கிறது, சர்வதேச யோகா தின வாழ்த்துகள்,” என அனுஷ்கா பதிவிட்டுள்ளார்.
அனுஷ்காவின் கூடுதல் அழகுக்கும் காரணம் யோகா தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.