விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் |
தெலுங்கில் ஹரிஸ் சங்கர் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் - பூஜா ஹெக்டே நடித்துள்ள படம் துவ்வாத ஜெகன்னாதம். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ரொமான்டிக் பாடலில் சிவபெருமானின் வேத மந்திரங்களை இணைத்திருந்தனர். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அந்த பாடலில் இடம்பெற்றிருந்த வேத மந்திர வார்த்தைகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கப்பட்டது.
அதன்காரணமாக தற்போது அந்த ரொமான்டிக் பாடலில் இடம்பெற்றிருந்த வேத மந்திரங்களை படக்குழு நீக்கியுள்ளனர். வருகிற ஜூன் 23-ந்தேதி துவ்வாத ஜெகன்னாதம் படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், அந்த பாடல் வரிகளின் வார்த்தைகள் மாற்றப்பட்டு விட்டதாக படக்குழுவினர் நேற்று அறிவித்துள்ளனர்.