இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
அர்ஜூன் கபூர் இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் முபாரக்கன். அனீஸ் பாஸ்மி இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜூன் கபூருடன் அனில் கபூர், இலியானா, அதியா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மும்பையில் நடந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன், இப்படம் பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதோடு, "தனக்கு பிடித்த இரட்டை வேடம் படம், அனில் கபூர் நடித்த கிஷன் கன்னையா தான். நான் இளைஞனாக வளர்ந்து காலக்கட்டத்தில் வெளியான இப்படம் முழுக்க முழுக்க பொதுபோக்கு அம்சம் நிறைந்த படமாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த படம் இது" என்றார்.
முபாரக்கன் படம் வருகிற ஜூலை 28-ம் தேதி ரிலீஸாக உள்ளது. சோனி பிக்சர்ஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளார்கள்.