பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தனுஷை வைத்து வேல்ராஜ் இயக்கிய 'வேலையில்லா பட்டதாரி' படம் வெற்றியடைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'வேலையில்லா பட்டதாரி-2' படம் தொடங்கப்பட்டது. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸும், கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் போஸ்ட்புரடக்ஷன்ஸ் வேலைகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன.
இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானதைத் தொடர்ந்து பாடல்கள் மற்றும் டிரைலர் வருகிற 25-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படத்தை தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியிடுவதாக சொல்லப்பட்ட 'விஐபி-2' படத்தை தற்போது ஹிந்தியில் டப் பண்ணி வெளியிடும் திட்டத்தில் அதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
விஐபி-2 படத்தில் ஹிந்தி நடிகை கஜோல், வில்லியாக நடித்திருப்பதால், அவரது புகழை வைத்து ஹிந்தியில் கல்லா கட்ட முடிவு செய்துள்ளார்கள். விஐபி-2 படத்தை ஹிந்தியில் ரிலீஸ் பண்ணினால் தனக்கு கூடுதல் சம்பளம் தர வேண்டும் என்று கஜோல் தற்போது போர்க்கொடி தூக்க தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.