கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
தன்னுடைய நண்பர் பெயரில் தொடங்கிய '24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிப்பில் 'ரெமோ' படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் அப்படத்தைத் தொடர்ந்து நடிக்கும் படம் 'வேலைக்காரன்'. கடந்த வருடம் துவங்கப்பட்ட இப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மலையாள நடிகரான பஹத் பாசில், சினேகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வரும்நிலையில் வேலைக்காரன் படம் செப்டம்பர் மாதம் 29-ஆம் தேதி வெளியாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே படத்தை வியாபாரம் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன. இதற்கிடையில் வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை விஜய் டிவி 16 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது
வேலைக்காரன் படத்துக்கு விஜய் டிவி கொடுத்துள்ளது மிகப்பெரிய தொகை என்கின்றனர் திரையுலகினர். சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 5.5 கோடிக்குத்தான் விலைபோனது. ஜீ டிவி வாங்கியது. ரெமோ படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் 8 கோடிக்கே விலைபோனது. ஜெயா டிவி வாங்கியது.
தற்போது வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் இரண்டு மடங்கு விலை போயிருக்கிறது. வேலைக்காரன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை 16 கோடிக்கு விஜய் டிவி வாங்கிய தகவல் சேனல் வட்டாரங்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.