சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
விஜய் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்புகள் வந்தாலோ, அல்லது அஜித் நடிக்கும் படம் பற்றிய அறிவிப்புகள் வந்தாலோ சமூக வலைத்தளங்களில் அவர்களது ரசிகர்களுக்குள் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும், இது பற்றி சம்பந்தப்பட்ட நடிகர்கள் இருவருமே எந்தக் கருத்தையும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்கள்.
விஜய்யாவது அவருடைய படங்களைப் பற்றிப் பேசுவதோடு, விவசாயிகள் பற்றியும் பேசுகிறார். அதேசமயம் அவரது ரசிகர்கள் எல்லை மீறிப் பேசுவதைப் பற்றி வாயைத் திறக்க மாட்டார். அஜித் அவருடைய படத்தைப் பற்றியும் பேச மாட்டார், நாட்டு நடப்புகளைப் பற்றியும் பேச மாட்டார், ஏன் அவருடைய ரசிகர்களைப் பற்றியும் கூட பேசமாட்டார்.
இன்று மாலை விஜய் நடிக்கும் 61வது படத்தின் முதல் பார்வை, தலைப்பு அறிவிப்பு வெளியாக உள்ளது. அந்தப் படத்திற்கு என்ன பெயர் வைத்து வந்தாலும் அதைக் கிண்டலடிப்பதற்கென்றே அஜித் ரசிகர்கள் இப்போதே காத்துக் கொண்டிருப்பார்கள். விஜய் 61 படத்தின் ஷுட்டிங் புகைப்படங்கள் லீக் ஆன போதே இது ஆரம்பமாகிவிட்டது தனிக் கதை.
விஜய் நடித்த 'பைரவா' படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்ட போது 'பை ரவா' (Buy Rava) என கிண்டடிலத்தார்கள். அவருடைய ஹேர்ஸ்டைல் முதல் கொண்டு விமர்சனம் செய்தார்கள். அதே சமயம் அஜித்தின் 'விவேகம்' படத்தின் முதல் பார்வை, தலைப்பு வெளியான போது, தலைப்பைக் கிண்டலடிக்க முடியவில்லை. இருந்தாலும் அஜித்தின் சிக்ஸ் பேக் தோற்றம் 'கிராஃபிக்ஸ்' என்று சர்ச்சையைக் கிளப்பினார்கள்.
'விவேகம்' டீசர், சிங்கிள் பாடல் ஆகியவை தற்போது சாதனை படைத்துக் கொண்டிருக்கும் நிலையில் விஜய்யின் 61வது படத் தலைப்பு இன்று மாலை என்ன ஒரு பரபரப்பை ஏற்படுத்தப் போகிறது என்பதற்கு இன்னும் 6 மணி நேரம் காத்திருக்க வேண்டும்.