ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஹாலிவுட் சினிமாவில் டிரான்ஸ்பார்மர் வரிசை படங்கள் தனி ரகம். ராட்சத இயந்திர மனிதர்களை கேரக்டர்களாக வடிமைத்து உருவாகும் இந்தப் படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. 1986ம் ஆண்டு இதன் முதல் பாகம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதன் பிறகு 4 பாகங்கள் வெளிவந்தன. இந்த படத்தின் கதை தெளிவாக புரிய வேண்டும் என்றால் எல்லா பாகங்களையும் பார்த்திருக்க வேண்டும் என்பது இதன் தனி சிறப்பு. இல்லாவிட்டால் காட்சிகளை மட்டுமே ரசிக்க முடியும்.
தற்போது இதன் கடைசி பாகம் டிரான்ஸ்பார்மர் லாஸ்ட் நைட் என்ற பெயரில் வெளிவர இருக்கிறது. முந்தைய 4 பாகங்களை இயக்கிய மைக்கேல் பே இந்த பாகத்தையும் இயக்கி உள்ளார். மார்க் வெல்பர்க், ஜோஸ் தாமல், ஸ்டேன்லி டுச்சி, ஆன்டனி ஹோப்கின்ஸ் நடித்துள்ளார். ஸ்டீவ் ஜாப்லன்ஸ்கி இசை மைத்துள்ளர். ஜொனத்தன் சேல் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தை பேரமண்ட் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. அமெரிக்க நாடுகளில் இன்று வெளியாகும் இந்தப் படம், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் வருகிற 30ந் தேதி வெளிவருகிறது. தமிழ் நாட்டில் வயாகாம் 18 மோசன் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாவதோடு 3டி, ஜமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் வெளியாகிறது. டிரான்ஸ்பார்மர் கடைசி வீரன் என்று தமிழில் டைட்டில் வைத்திருக்கிறார்கள்.