Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நேரத்தில் 4 மொழிகளில் அறிமுகமாகிறார் தன்ஷிகா

21 ஜூன், 2017 - 11:01 IST
எழுத்தின் அளவு:
Dhansika-to-debut-in-four-languages-at-a-time

சிறு படங்களின் நாயகியாக இருந்த தன்ஷிகா ஜனநாதன் இயக்கிய பேராண்மை படத்தின் மூலம் கவனம் பெற்றார். அதன் பிறகு பாலா இயக்கிய பரதேசி, வசந்தபாலன் இயக்கிய அரவாண் படங்கள் மூலம் பிரபலமானார்.ரஜினியுடன் கபாலி படத்தில் நடித்த பிறகு இன்னும் பிரபலமானார்.


இதுவரை பிற மொழிப் படங்களில் நடிக்காமல் இருந்த தன்ஷிகா இந்த ஆண்டு மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னட படங்களில் அறிமுகமாகிறார். இதுகுறித்து தன்ஷிகா கூறியதாவது: 'காலக்கூத்து' என்ற படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். கல்லூரிக்கு செல்லும் பெண்ணாக நடித்திருக்கிறேன். இதிலும் எனக்கு கலையரசன் தான் ஜோடியாக நடிக்கிறார். பல ஆண்டுகளாக மதுரையில் ஒரு பெண் காதலில் விழுந்துவிட்டால்..அந்த பெண்ணை அவரது குடும்பத்தினர் எப்படி அணுகுகிறார்கள்? என்ற எண்ணவோட்டத்தை அசலாக மண் மணம் மாறாமல் பிரதிபலிப்பது போலிருக்கும் கதையிது. இதனை நாகராஜ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கியிருக்கிறார். இவரும் இந்த மண்ணைச் சேர்ந்தவர் தான். யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் இயக்கும் படமிது.


இயக்குநர் மீரா கதிரவனின் இயக்கத்தில் 'விழித்திரு'-வில் வட சென்னை குடிசைப்பகுதியில் வாழும் பெண்ணாக நடித்திருக்கிறேன். முதன்முதலில் இந்த படத்தில் காமெடி கலந்து நடித்திருக்கிறேன்.. 'டேவிட்' என்ற படத்தை இயக்கிய பிஜோய் நம்பியார் இயக்கும் 'சோலோ' என்ற படத்தில் ஒரு அற்புதமான கேரக்டரில் நடித்திருக்கிறேன். அதில் கண் பார்வையற்ற பெண்ணாகவும், நடனக் கலைஞராகவும் சவாலான கேரக்டரில் நடித்திருக்கிறேன். எனக்கு ஜோடியாக துல்கர் சல்மான் நடித்திருக்கிறார்.


தெலுங்கில் 'வாலுஜடா..' என்ற படத்திலும், கன்னடத்தில் சுனில் குமார் தேசாய் என்பவரின் இயக்கத்தில் உருவாகும் 'உத்கர்ஷா' என்ற படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறேன். ஹிந்தியில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. எந்த மொழியில் நடித்தாலும் கதை தான் முக்கியம். கதை நன்றாக இருந்தால் மொழி கடந்தும் நடிப்பேன். என்கிறார் தன்ஷிகா.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in