சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் |
சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள விவேகம் படத்தின் சிங்கிள் பாடலான சர்வைவா.. பாடலின் லிரிக் வீடியோ நேற்று மாலை யு டியூப் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதற்கு ஒரு நாள் முன்னதாகவே ஐ டியூன் மற்றும் சாவன் இணையதளங்களில் வெளியானது. இந்த ஒரு பாடல் சாவன் இணையதளத்தில் ஒரு நாளைக்குள்ளாகவே 5 லட்சம் முறை கேட்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல ஐ டியூன் பாடல் தரவிறக்கத்திலும் உலக அளவில் முன்னிலை பெற்றுள்ளது.
நேற்று மாலை இந்தப் பாடலின் லிரிக் வீடியோ யு டியுபில் வெளியிடப்பட்டது. இன்று காலை வரை சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வை இந்தப் பாடலுக்குக் கிடைத்துள்ளது. 90 ஆயிரம் பேர் வரை பாடலை லைக் செய்துள்ளனர். வேதாளம் படத்திற்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்துள்ள அனிருத், அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இந்த ஒரு பாடலிலேயே பூர்த்தி செய்துள்ளார். அதற்கு சாட்சியாக அஜித் ரசிகர்கள் அனிருத்தைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து தனக்கு பல ஹிட்டுகளைக் கொடுத்த அனிருத்தை தனுஷ் கைவிட்டாலும், அஜித், வேதாளம் படத்திற்குப் பிறகும் அனிருத்துக்கே வாய்ப்பு கொடுத்து அனிருத்தையும் சேர்த்து மீண்டும் பேச வைத்திருக்கிறார். அதற்கு நன்றியாகத்தான் அனிருத் இப்படி ஒரு அதிரடியான பாடலைக் கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பேசிக் கொள்கிறார்கள். இந்த ஒரு பாடல் போலவே மற்ற பாடல்களும் அதிரடியாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.