Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விவசாயிகளின் கடனை ரத்து செய்யுங்க... முதல்வருக்கு விஷால் கடிதம்

20 ஜூன், 2017 - 17:38 IST
எழுத்தின் அளவு:
Vishal-wrote-letter-to-CM-regarding-cancel-the-farmers-loan

விவசாயிகளின் கடனை ரத்து செய்யுங்கள் என முதல்வர் பழனிசாமிக்கு, நடிகர் விஷால் கடிதம் எழுதியுள்ளார். சமீபத்தில், தமிழக விவசாயிகள் தலைநகர் டில்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தியபோது விஷால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். மேலும் இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களையும் சந்தித்து பேசினர். தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவாக விஷால் குரல் கொடுத்து வருகிறார் .


இந்நிலையில், விவசாயிகளின் கடனை ரத்து செய்ய கோரி முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் விஷால். அதில் அவர் கூறியிருப்பதாவது....


ஜெயலலிதாவின் கனவுகளை நினைவாக்கி சிறப்புடன் ஆட்சி செய்து வரும் தாங்கள்(பழனிசாமி), தமிழ்நாட்டில் நமது விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுகிறேன். நமது அண்டை மாநிலங்களான உத்திரபிரதேசம், மகாராஷ்டிராவில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்ததை அறிந்து பஞ்சாப் மாநிலமும் விவசாய கடன்களை ரத்து செய்துள்ளது.


மற்ற மாநிலங்கள் செய்தது போன்று தமிழக அரசும், விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் வறுமையை போக்கும் விதமாக கடன்களை ரத்து செய்து எதிர்கால விவசாயிகளின் வாழ்க்கையை வளமாக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.


இவ்வாறு விஷால் தமது கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.


Advertisement
சிம்பு படத்துக்கு கிடைத்த பெருமைசிம்பு படத்துக்கு கிடைத்த பெருமை விவேகம் - சர்வைவா பாடலின் சாதனை விவேகம் - சர்வைவா பாடலின் சாதனை


வாசகர் கருத்து (30)

சென்னை பாலன் - Chennai,இந்தியா
21 ஜூன், 2017 - 10:51 Report Abuse
சென்னை பாலன் உங்க அப்பன் வீட்டு பணமா, எடுத்துவிடுவதற்கு. மக்கள் வரிப்பணம்ல. யோசிச்சு பேசு.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
21 ஜூன், 2017 - 10:42 Report Abuse
Mirthika Sathiamoorthi விஷால் செஞ்சதுல என்ன தப்பு இருக்கு? நடிகர்கள் அரசியலுக்கு வரும்போது மக்கள் பிரச்சனைக்கு என்ன குரல் கொடுத்தாய் அப்படின்னு கேக்கறது...அரசியலுக்கு வருவதற்கு முன் சமூக பிரச்சனைக்கு குரல் கொடுத்தால் பகடி பண்றது...நாம் பண்பட்ட சமூகமா? விவசாயிகளின் பிரச்னை மிக முக்கிய பிரச்னை ..இது பற்றி யார் குரல் கொடுத்தாலும் அதுக்கு நமது ஆதரவை தரணுமா? இல்ல இந்த ஆள எனக்கு புடிக்கல அதனால இவன் என்ன சொன்னாலும் நான் ஏத்துக்க மாட்டேன் அப்படிங்கறது சரியா? விவசாய கடன் தள்ளுபடியில் மாநில அரசின் முடிவுக்கு மத்திய அரசு எந்த உதவியும் செய்யாது அப்படின்னு அருண் ஜெட்லீ சொன்னபிறகும் கடன் தள்ளுபடி பற்றி நாம யாருகிட்ட பேச முடியும் தமிழக முதல்வரை தவிர...ஏனைய விவசாயமல்ல துறைகளில் 60 லட்சம் கோடி வரி சலுகை வழங்கும்போது ஏன் 2 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யக்கூடாது? இத தான் அய்யாக்கண்ணு கேக்குறார்..விஷாலும் இத தான் சொல்றார்..இதுக்கு எதுக்கு இவளவு கண்டனம்? இந்திய சுதந்திரம் அடைந்த பின் 20 வருடம் நாட்டை ஆண்டவங்க பெரும்பாலோர் விவசாயத்தை சேர்ந்தவங்க..அதனால விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுத்து திட்டங்கள் போட்டாங்க. இப்போ நிலைமை வேற. விவசாயம் நாட்டின் பொருளாதாரத்தில் 15 சதிவிதம் மட்டுமே பங்கு அளிக்குது...பெரும் நிலச்சுவான்தாரர் தொழிற்சாலை பக்கம் போயிட்டதனால இப்போ இருக்கிறது சிறு மற்றும் குறுநில விவசயிகள் மட்டுமே..இவங்களால இந்தியாவின் பொருளாதார கொள்கையில் எந்த செல்வாக்கும் இல்லாதனால இவங்க குரல் கிணத்தில் போட்ட கல்லாட்டம் இருக்கு. இவங்களுக்காக நாம குரல் கொடுக்கிற நேரத்தில நீ குரல் கொடுக்காதே..நான்தான் குரல் கொடுக்கணும் அப்படிங்கற மனப்பாண்மை என்னன்னு சொல்லுறது? விலையேற்றத்தை கட்டுப்படுத்தணும்ங்கற நோக்கத்தில் விவசாய பொருட்களின் விலையை ஏற்றமா, உற்பத்தி அதிகரிச்சு விலை கட்டுப்படுத்தபோது..விவசாயி ஆத்திரப்படாம என்ன செய்வான்? நகர்ப்புற மக்களையும், நடுத்தர வர்க்கத்தையும் உணவு பொருள் விலைவாசி உயர்விலிருந்து பாதுகாக்க ஏறத்தாழ 20 கோடி இந்திய கிராமப்புறங்களில் வாழும் மக்களை வறுமையில் வடாவிடிகிறோம்..இதுவா ஜனநாயக நியாயம்? இத சரிசெய்ய தேவையான திட்டங்களை திட்டமா சும்மா இருக்கிற அரசாங்கம்..குறைஞ்சு பட்சம் அவங்க கடனை தள்ளுபடியாவது செய்யணும்...அதுக்கு யாராவது குரல் கொடுத்த அவங்கள மறுபடியும் குரல் கொடுக்காம செய்யிற நாம விவசாயிங்களா பத்தி யோசிக்கப்போறோம்? ..நாம் பண்பட்ட சமூகமா?
Rate this:
Karun Muruga - banglore,இந்தியா
21 ஜூன், 2017 - 09:32 Report Abuse
Karun Muruga ஆடு நனையுதன்னு ஓநாய் அழுவுது எல்லாம் கோடி கோடியா சம்பாதிக்கிறீங்க எல்லோரும் கொடுத்து உதவலாம் இல்லையா இவரு என்னவோ "லெட்டர் போடுறாராம் முதல்வருக்கு" எல்லாம் டுபாக்கூர் .....
Rate this:
Rajarajan - Thanjavur,இந்தியா
21 ஜூன், 2017 - 09:22 Report Abuse
Rajarajan இப்படி எதாவது கருத்து சொல்லவேண்டியது. அப்புறம் திடீர்னு கட்சி ஆரம்பிக்க வேண்டியது. நாட்டின் பிரதமர், நிதியமைச்சர், பொருளாதார மேதை, மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தெரியாதது எல்லாம், எப்படி தான் இந்த நடிகர்களுக்கு மட்டும் தெரியுதோ ?? அப்படியே மறக்காம, பஞ்ச் வசனம் பேசிடுங்க. அப்ப தான், கட்சி தொடங்க முடியும். அவரவர் தகுதிக்கு ஏற்றபடி வேலை செய்தால் போதும்.
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21 ஜூன், 2017 - 08:15 Report Abuse
Srinivasan Kannaiya அறுபது சதவிகிதம் பணம்படைத்தவர்கள் விவசாயீ என்ற போர்வையில் கடனை பெற்று வேறு காரியங்களுக்கு பயன்படுத்தி கொண்டனர்... இந்த நிலையில் கடனை ரத்து செய்யுங்கள் என்று கேட்பது எந்த விதத்தில் ஞாயம்..
Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in