பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
அஜித் - சிவா கூட்டணியில் இதற்கு முன் வெளிவந்த 'வீரம், வேதாளம்' ஆகிய இரண்டு படங்களும் வசூல் ரீதியான வெற்றிப் படங்களாக அமைந்தது. இந்த கூட்டணியின் மூன்றாவது படமான 'விவேகம்' படத்திற்கு 'வீரம், வேதாளம்' படங்களை விட வேறு ஒரு பரிமாணத்தில் இருக்கும் என படத்தின் டீசரே புரிய வைத்துவிட்டது.
'வீரம்' படம் ஒட்டன்சத்திரத்தைக் கதைக்களமாகக் கொண்டு கிராமத்துப் பின்னணியில் அமைந்த படமாக இருந்தது. 'வேதாளம்' படம் சென்னையை மையமாககக் கொண்ட கதையில் கோல்கட்டாவும் முக்கியப் பின்னணியாக அமைந்தது. ஆனால், 'விவேகம்' படம் முற்றிலும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டுள்ளதால் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அந்த காரணத்தால் தற்போது 'விவேகம்' படத்தின் கேரள உரிமை முந்தைய அஜித் படங்களின் விலையை விட அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இந்த உரிமையை 'புலி முருகன்' படத்தின் தயாரிப்பு நிறுவனமான முலக்குப்பாடம் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.