இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் 'விவேகம்' படத்தின் 'சர்வைவா...' பாடல் நேற்று ஐ-டியூனில் வெளியிடப்பட்டது. பாடலின் டீசர் கடந்த வாரம் யூ டியூபில் வந்த போதே வரவேற்ற அஜித் ரசிகர்கள், இந்தப் பாடல் முழுவதையும் நேற்று கேட்டு பாராட்டித் தள்ளி வருகிறார்கள்.
அதற்குக் காரணம் பாடல் வித்தியாசமாக அமைந்திருப்பது மட்டுமல்ல, பாடலின் வரிகளும் அவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்பதும்தான். ராப் வகைப் பாடலாக இருப்பதால் வார்த்தைகளைக் கொஞ்சம் கஷ்டப்பட்டுத்தான் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இருந்தாலும் அஜித்திற்காகவே எழுதப்பட்ட பாடல் என்பது பாடலைக் கேட்பதில் புரிந்து கொள்ள முடிகிறது.
“சரித்திரம் புரட்டு..
போராட்டம் பல்லாயிரம்..
தடைகள் வென்றவர் யார்
சாமானியன் எல்லாரும்
இருட்டுப் பாதைகளில்..
தன்னம்பிக்கை தீப்பந்தம்
துணிந்தவன் மதி வெல்லும்
பாடங்கள் கற்றதால்
விழ விழ நான் எழுவேன்
முதுகெலும்பு சிதைந்தும்
தொடுவோம் சிகரம்
வருங்காலம் நம்மைப் போற்றுமடா..
என பாடலின் ஆரம்ப வரிகளே 'ஹீரோயிசத்துடன்' அட்டகாசமாக அமைந்துள்ளது.
நமக்கு நிகர் இல்லை ஒருவர்..
முயன்றால்தான் சாத்தியம், நிறுத்தாதே..
மேன்மைதான் லட்சியம்..
வாழ்க்கையில் நோ ரிக்ரெட்ஸ்..
தொடுவோம் சிகரம்..என அடுத்தடுத்த வரிகளும் யாருக்கோ சேர்த்தும் எழுதப்பட்டிருக்கிறது.
ஆண்டவன்...Bless me higher..
Everytime we walk through fire
Enemies want we retire... என அஜித்தின் எதிரிகளையும் குறி வைக்கிறது பாடலின் வரிகள்.
நான் பண்பானவன்..
தோல்வி உந்தன் படிக்கட்டு..
உச்சம் ஏறி கொடிகட்டு..
வெற்றி வாகை சூடி...
என ஆங்கிலமும், தமிழும் கலந்த இந்த 'ராப்' பாடல் இந்தக் கால இளைஞர்களைக் கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அஜித் ரசிகர்களுக்கு எப்படிப்பட்ட பாடல் இருந்தால் கொண்டாடுவார்களோ, அதை மனதில் வைத்து இசையமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத்.
யோகி பி, மாலி மனோஜ் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார்கள்.
இன்னும் சில காலங்களுக்கு இந்தப் பாடல்தான் அஜித் ரசிகர்களின் 'தெறிக்கவிடும்' கீதம்.