'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
தனது 4 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய ஸ்ரீதேவி, இப்போது 53வது வயதில் 50 ஆண்டு கலைப்பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார். 2012ல் இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் கதையின் நாயகியாக நடித்தவர், தற்போது ஹிந்தியில் மாம் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இந்த படம் ஜூலை 7-ந் தேதி திரைக்கு வருகிறது. இப்படம் ஸ்ரீதேவியின் 300வது படமாகும். அம்மா என்ற பெயரில் தமிழில் டப்பாகி வெளியாகும் இந்த மாம் படம், தெலுங்கு, மலையாளத்திலும் வெளியாகிறது. முக்கியமாக நான்கு மொழிகளுக்கும் ஸ்ரீதேவியே டப்பிங் பேசியிருக்கிறார்.
இந்த நிலையில், பிலிம்பேர் இதழின் அட்டைப்படத்தில் இளவட்ட நாயகிகளே இடம்பெற்று வந்த நிலையில், இப்போது 53 வயது அழகியான ஸ்ரீதேவி தற்போது இடம்பெற்றிருக்கிறார். அவரது புகைப்படம் பிலிம்பேரில் வெளியானதை அடுத்து 50 வயதிலும் இளமையாக காட்சி கொடுத்து அட்டைப்படத்தை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரீதேவி என்று பாலிவுட் பட உலகில் பலரும் அவருக்கு புகழாரம் சூட்டி வருகிறார்கள்.