ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து வரும் படம் ஸ்பைடர். செப்டம்பர் 21-ந்தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டைட்டீல், பர்ஸ்ட்லுக், டீசர் என ஒவ்வொன்றாக வெளியிட்டு மகேஷ்பாபு ரசிகர்களை உற்சாகப்படுத்திய முருகதாஸ், கடந்த சில தினங்களாக இறுதிகட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு வந்தார்.
அந்தவகையில், மகேஷ்பாபு சம்பந்தப்பட்ட வசன காட்சிகள் அனைத்தும் நேற்றோடு படமாக்கப்பட்டு முடிந்தது. இந்த படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து ஜூன் 21-ந்தேதி முதல் பாரத் அனி நேனு படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் மகேஷ்பாபு. அப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பிறகு மீண்டும் ஜூலையில் ஸ்பைடர் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு இரண்டு பாடல் காட்சிகளில் நடிக்கிறார் மகேஷ்பாபு.