Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

துபாயில் ரஜினியின் 2.O இசை வெளியீடு?

20 ஜூன், 2017 - 11:45 IST
எழுத்தின் அளவு:
2-Point-O-Audio-Launch-in-Dubai

சிவாஜி, எந்திரன் படங்களைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடித்து வரும் படம் 2.O. எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படமும் ரொபோட்டிக் கதையில் உருவாகி வருகிறது. ஹிந்தி நடிகர் அக்ஷ்ய் குமார், வில்லனாக நடித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. 2.O படம் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கிராபிக்ஸ் வேலைகள் காரணமாக ரிலீஸ் தேதியை அடுத்த ஆண்டு ஜனவரிக்கு மாற்றி விட்டனர்.


இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டை மும்பையில் பிரமாண்டமாக நடத்தினர். இந்நிலையில், இப்படத்தின் இசை இந்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. அதோடு, பர்ஸ்ட் லுக்கை மும்பையில் வெளியிட்டவர்கள், ஆடியோவை துபாயில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.


Advertisement
அஞ்சலி, ஜெய் காதல் பற்றி தெரியாது: சொல்கிறார் பலூன் இயக்குனர்அஞ்சலி, ஜெய் காதல் பற்றி தெரியாது: ... இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஸ்பைடர் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் ஸ்பைடர்


வாசகர் கருத்து (7)

kmish - trichy,இந்தியா
20 ஜூன், 2017 - 16:56 Report Abuse
kmish ஏன்யா நீதான் பச்சை தமிழன்னு சொன்னியே , ஏன் தமிழ் நாட்டுல வெளியிட இடமே இல்லையா
Rate this:
shankar - chennai,இந்தியா
20 ஜூன், 2017 - 16:11 Report Abuse
shankar சங்கரோட மூளை எல்லாம் ஜெண்டேல்மேன், இந்தியன், முதல்வன் மற்றும் அந்நியன் இதோட முடிஞ்சிபோச்சு சிவாஜி கூட பரவாயில்லை ஆனால் எந்திரன் ஷங்கர் எடுத்ததைவிட ராமா நாராயணன் எடுத்திருந்தா கிளைமாக்ஸ் நல்லா இருந்துருக்கும். அடுத்தது 2 .ஓ இப்போ நிட்சையமா ராமா நாராயண இடத்துக்கு ஷங்கர் வந்துடுவார்.
Rate this:
Venki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20 ஜூன், 2017 - 14:44 Report Abuse
Venki அடுத்தது எங்கே செவ்வாய் கிரகத்திலேயே ரஜினி பேசிய டயலாக் எதுமே அளவுக்கு அதிகமா இருந்த நிம்மதி இருக்காது இந்த திரைப்பட துறை இந்திய அரசியல் மாபியாக்கள் மணி லாண்டரி துறையாக சேவை செய்கிறது நேர்மையை வாழ்பவர்கள் இறைவனை வணங்க வேண்டியதுகூட இல்லை ஆனால் பாவங்களை மூட்டை மூட்டையை சம்பாதிப்பவர்கள் இமய மலை என்ன ஏழு லோகம் சென்றாலும் இறைவனை(நிம்மதியை) அடைய முடியாது
Rate this:
Narendran Mohan - Chennai,இந்தியா
20 ஜூன், 2017 - 13:40 Report Abuse
Narendran Mohan நீங்க சந்திர மண்டலத்தில் போய் ரிலீஸ் பண்ணா கூட பாட்டு நல்லா இருந்தாதான் கேப்பாங்க. நீங்க ரிலீஸ் பண்ணதுக்கு அப்புறம் நாங்க கேட்டுட்டாலும் அப்படியே இன்ப தேன்வந்து பாயுது காதினிலேனு இருக்க போகுது..
Rate this:
varun - tamilnadu,இந்தியா
20 ஜூன், 2017 - 12:50 Report Abuse
varun என்னையா அநியாயம் இது ? பேரு தமிழ் படம் , first look மும்பைல , இசை வெளியீடு துபாய்ல ....? இப்படி செய்துங்கூட படத்தை பார்க்க நம்ம மக்கள் ஓடும்பாருங்க 2000, 3000 ரூவாய்க்கு டிக்கெட் வாங்கிட்டு .........என்னத்த சொல்ல ?
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thimiru pudichavan
  Tamil New Film Kaa
  • கா
  • நடிகை : ஆண்ட்ரியா
  • இயக்குனர் :நாஞ்சில்
  Tamil New Film Mr Chandramouli
  Tamil New Film Saamy 2
  • சாமி 2
  • நடிகர் : விக்ரம் ,
  • நடிகை : கீர்த்தி சுரேஷ்
  • இயக்குனர் :ஹரி

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in