Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி பட தலைப்பில் நடிக்கும் பிரஷாந்த்

20 ஜூன், 2017 - 10:08 IST
எழுத்தின் அளவு:
Prasanth-acting-in-Rajini-movie-title

ரஜினி நடித்த படங்களின் தலைப்பில் நடிப்பது இப்போதைய டிரண்ட். அந்த வரிசையில் நடிகர் பிரஷாந்த்தும் இணைந்திருக்கிறார். மகேந்திரன் இயக்கத்தில், ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து புகழ்பெற்ற படமான ஜானி பட தலைப்பு தான், பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தலைப்பாகியுள்ளது.


சாஹசம் படத்திற்கு பிறகு பிரஷாந்த் நடிக்கும் படம் இது. இதில் அவருக்கு ஜோடியாக மும்பை மாடல் அழகி அனைன்யா சோரி நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சாயஜி ஷிண்டே, பசுபதி, ஆனந்தராஜ், கிஷோர், தேவதர்ஷினி, கலைராணி ஆகியோரும் நடிக்கிறார்கள். "நான், அமரகாவியம், எமன்" படங்களில் இயக்குநர் ஜீவா சங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெற்றிச்செல்வன் ஜானி படத்தை இயக்குகிறார். எம்.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்டார் மூவீஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார்.


இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். இப்படத்திற்காக பிரஷாந்த், தனது உடல் எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். சென்னை மற்றும் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இரண்டு ஷெட்யூல்களில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார் தியாகராஜன்.


Advertisement
தமிழனாக இருந்தால் படத்தை இணையதளத்தில் போடாதே : ஜெயம் ரவிதமிழனாக இருந்தால் படத்தை ... மீண்டும் படம் இயக்குகிறார் டி.ராஜேந்தர் மீண்டும் படம் இயக்குகிறார் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thimiru pudichavan
    Tamil New Film Kaa
    • கா
    • நடிகை : ஆண்ட்ரியா
    • இயக்குனர் :நாஞ்சில்
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in