'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரஜினி நடித்த படங்களின் தலைப்பில் நடிப்பது இப்போதைய டிரண்ட். அந்த வரிசையில் நடிகர் பிரஷாந்த்தும் இணைந்திருக்கிறார். மகேந்திரன் இயக்கத்தில், ரஜினி இரண்டு வேடங்களில் நடித்து புகழ்பெற்ற படமான ஜானி பட தலைப்பு தான், பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தலைப்பாகியுள்ளது.
சாஹசம் படத்திற்கு பிறகு பிரஷாந்த் நடிக்கும் படம் இது. இதில் அவருக்கு ஜோடியாக மும்பை மாடல் அழகி அனைன்யா சோரி நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சாயஜி ஷிண்டே, பசுபதி, ஆனந்தராஜ், கிஷோர், தேவதர்ஷினி, கலைராணி ஆகியோரும் நடிக்கிறார்கள். "நான், அமரகாவியம், எமன்" படங்களில் இயக்குநர் ஜீவா சங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய வெற்றிச்செல்வன் ஜானி படத்தை இயக்குகிறார். எம்.பன்னீர் செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார், ஸ்டார் மூவீஸ் சார்பில் தியாகராஜன் தயாரிக்கிறார்.
இது ஒரு சஸ்பென்ஸ் திரில்லர் படம். இப்படத்திற்காக பிரஷாந்த், தனது உடல் எடையை கணிசமாக குறைத்திருக்கிறார். சென்னை மற்றும் ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடக்கிறது. இரண்டு ஷெட்யூல்களில் படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார் தியாகராஜன்.