ஏப்., 30 முதல் ஒலிக்க தயாராகும் கமலின் மையம் விசில் ஆப் | தமிழ் சினிமாவை இந்திய சினிமாவே திரும்பி பார்க்கிறது : விஷால் | உன்னி முகுந்தனுக்கு டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா | கடவுள் என்னை மன்னிக்கமாட்டார் : பிருத்விராஜ் | எர்ணாகுளம் சாலைகளில் இளைஞர்களை பதறவைத்த மம்முட்டி | விஜய் ஆண்டனியை மாற்றிய அண்ணாதுரை | கைகொடுக்கும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் | தியா படத்துக்கு முன்னுரிமை ஏன்? | குழந்தைக்குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார் | பாடகியான சிவகுமாரின் மகள் |
ஜெயம் ரவி, சாயிஷா ஷெகல் நடிப்பில் உருவாகியுள்ள படம் "வனமகன்". ஏஎல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவி ஆதிவாசியாக நடித்திருக்கிறார். இப்படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது. வனமகன் படக்குழுவினர், இன்று(ஜூன் 19-ம் தேதி) பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ஜெயம் ரவி, "வனமகன் படத்திற்காக இயக்குநர் விஜய் என்னை பிழிந்து எடுத்துவிட்டார். படப்பிடிப்புக்காக காடுகளில் மொத்த படக்குழுவும் பலமணிநேரம் நடக்க வேண்டியிருந்தது. மேக்கப் இல்லாமல் ஆதிவாசியாக என்னை அலய விட்டிருக்கிறார். மரம் விட்டு மரம் எல்லாம் தாவ விட்டுள்ளார். இந்த வலிகளை எல்லாம் தாங்கி கொண்டு தான் நடித்தேன். ஒருவேளை வனமகன் இரண்டாம் பாகம் உருவானால், கண்டிப்பாக அதில் நடிக்க மாட்டேன்.
இருந்தாலும் விஜய்யின் கடின உழைப்பிற்காகவே இந்தப்படம் நிச்சயம் ஜெயிக்கும். போட்ட காசை விட அனைவரும் நிறைய காசு எடுப்பார்கள். அப்படி இல்லாமல் போனால் நானே விஜய்யாக மீண்டும் ஒரு படம் பண்ணுவேன், அதில் நானும் ஒரு தயாரிப்பாளராக இருப்பேன், ஏனென்றால் என் வண்டியும் ஓடணுமே என்றவர், திருட்டு விசிடி மற்றும் ஆன்லைன் பைரசி பற்றி பேசும்போது, தமிழனாக இருந்தால் படத்தை இணையதளத்தில் போடாதே..." என்று கொஞ்சம் ஆவசேமாகவும் பேசினார்.