தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம். அஜித்துடன் விவேக் ஓபராய், காஜல்அகர்வால், அக்சராஹாசன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் ஆடியோ ஜூலை மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு அஜித்தின் வேதாளம் படத்தில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து அனிருத், இந்த படத்தின் பாடல்களின் மெகா ஹிட் பண்ணி விட வேண்டும் என்று அதிக காலஅவகாசம் எடுத்து பாடல்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், விவேகம் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து, இப்படத்தில் இடம்பெறும் சர்வைவா என்ற பாடல் டீசர் சிலதினங்களுக்கு முன்னர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இன்று ஜூன் 19-ந்தேதி மாலை 6 மணிக்கு சர்வைவா முழு பாடலும் ஒன்று வெளியாகயிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் அநேகமாக விவேகம் படத்தின் தீம் பாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.