ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் |
சிவா இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷ்ரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'விவேகம்'. இப்படத்தின் படப்பிடிப்பு பல்கேரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு பல புதிய சாதனைகளைப் படைத்தது. அதற்கடுத்து கடந்த வாரம் 'சர்வைவா' என்ற பாடலின் 25 வினாடி டீசர் மட்டும் வெளியானது. இந்த டீசரும் அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆகஸ்ட் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால் படத்தின் இசை வெளியீட்டை விரைவாக நடித்தி முடிக்க திட்டமிட்டுள்ளார்களாம். ஜுலை 27ம் தேதி இப்படத்தின் இசை வெளியீடு நடக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்த் திரையுலகில் அனிருத்துக்கு ஒரு இடைவெளி விழுந்துவிட்டது. அதை 'விவேகம்' படம் சரி செய்துவிடும் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஹாலிவுட் படம் போல இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதால் படத்தின் பாடல்களிலும் மேற்கத்திய இசை அதிகம் இருக்கும் என்று சொல்கிறார்கள்.
'விவேகம்' படத்தின் இசை வெளியீடு நடைபெறும் சமயம் படத்தின் டிரைலரும் வெளியிட வாய்ப்புகள் உள்ளன. சிவா - அஜித் கூட்டணி இதற்கு முன் இணைந்த 'வேதாளம்' படத்திற்கு டீசர் மட்டுமே வெளியிடப்பட்டது, டிரைலர் வெளியாகவில்லை. அந்தக் குறையை 'விவேகம்' படத்தில் சரி செய்ய உள்ளார்களாம்.