துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
நளனும் நந்தினியும், சுட்டகதை, உள்ளிட்ட பல படங்களை தயாரித்த லிப்ரா புரொடக்ஷன் நிறுவனம், தற்போது பிரமாண்ட குறும்பட போட்டி நடத்தி, வெற்றி பெறுகிறவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்குகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு...
குறும்படங்கள் தற்போது நல்ல இயக்குனர்களை சினிமாவுக்கு தந்து கொண்டிருக்கிறது. குறும்படங்கள் இயக்குனர்களின் விசிட்டிங் கார்டாக இருக்கிறது. அதனால் குறும்படங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. மிகச்சிறந்த குறும்படம் என்கிற ஒரு பிரிவில் மட்டுமல்லாமல் மிகச்சிறந்த குறும்பட இயக்குனர், நடிகர், நடிகை, நகைச்சுவை நடிகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என திரைப்படங்ளை போன்றே பல பிரிவுகளிலும் போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
வரும் ஜூலை-15 தான் போட்டியாளர்கள் தங்களது படைப்பை அனுப்பவதற்கான கடைசி நாளாகும். ஒவ்வொரு குறும்படமும் 17 நிமிடங்களுக்கு அதிகமான கால அளவில் இருக்க கூடாது என்பதும், ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பது போட்டியின் முக்கிய விதிகள்.
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்கள், தொழிநுட்ப கலைஞர்கள் இந்த குறும்படங்களை பரிசீலித்து அதில் சிறந்த பத்து குறும்படங்களை தேர்ந்தெடுப்பார்கள். அந்த பத்து படங்களும் விழா நடைபெற இருக்கும் ஒரு குறிப்பிட்ட நாளில் மொத்தமாக திரையிடப்பட்டு அதில் அனைத்து பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றிபெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அன்று மாலையே பரிசளிப்பு விழா மிகப்பெரிய அளவில் நடைபெற இருக்கிறது.
முதல் பரிசாக 10 லட்சம், 2ஆம் பரிசாக 7 லட்சம் மற்றும் 3ஆம் பரிசாக 5 லட்சம் ரூபாய் என பரிசு தொகைகள் வழங்கப்பட இருக்கின்றன. இதில் இன்னொரு சிறப்பு அம்சமாக மீதி உள்ள ஏழு குறும்படங்களுக்கும் சிறப்பு பரிசாக தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
குறும்பட சிடிகளை இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் : நம்பர் 14. முதல் குறுக்கு தெரு, லம்பார்ட் நகர், அழ்வார்திருநகர், சென்னை-87.
தொடர்புக்கு : 97899 16561, ஆபீஸ் : 044-42089658.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.