பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மதராசப்பட்டினம் படத்தில் லண்டன் நடிகை எமிஜாக்சனை தமிழுக்கு அறிமுகம் செய்தவர் டைரக்டர் ஏ.எல்.விஜய். அதையடுத்து தற்போது தனது வனமகன் படத்திற்காக மும்பையில் இருந்து சாயிஷா என்ற நடிகையை இறக்குமதி செய்திருக்கிறார் அவர். இந்த சாயிஷா பிரபல இந்தி நடிகர் திலீப் குமாரின் பேத்தி ஆவார். மேலும், நாகார்ஜூனாவின் இளைய மகன் அகில் நடித்த அகில் என்ற படத்தில்தான் இந்த சாயிஷா அறிமுகமானார். அதையடுத்து இந்தியில் அஜய்தேவ்கான் நடித்த ஷிவாய் என்ற படத்தில் நடித்தவர், தற்போது ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள வனமகன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித் திருக்கிறார்.
இந்த படத்தில் சாயிஷாவின் அதிரடியான நடனத்தைப்பார்த்து அசந்து போன பிரபுதேவா, விஷால், கார்த்தியை வைத்து தான் இயக்கும் கறுப்பு ராஜா வெள்ளை ராஜா படத்திற்கும் புக் பண்ணியிருக்கிறார். ஆக, தமிழில் நடித்த முதல் படமே திரைக்கு வருவதற்குள் அடுத்த படத்தில் கமிட்டாகி விட்டார் சாயிஷா. இந்தநிலையில், சாயிஷா நடித்துள்ள வனமகன் வரும் வருகிற ஜூன் 23-ந்தேதி திரைக்கு வருவதால், அந்த படத்திற்கு பிறகு அவரை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய மேலும் சில டைரக்டர்களும் தயார் நிலையில் உள்ளனர்.