பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் மூன்றாவது மனைவி தான் மான்யதா தத்.. ரசிகர்களுக்கு அந்த அளவிற்குத்தான் அவரைப்பற்றி தெரிந்திருக்கும்.. ஆனால் சஞ்சய் தத்தை திருமணம் செய்வதற்கு முன் அவர் சில பி கிரேடு படங்களில் நடிக்கும் நடிகையாகத்தான் இருந்தாராம்.. சிறுவயதில் இருந்தே சினிமாவில் டாப் ஹீரோயினாக வரவேண்டும் என்பதுதான் மான்யதாவின் லட்சியமாக இருந்ததாம்.. ஆனால் எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் அடிப்பது இல்லையே.. அதனால் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சில பி கிரேடு படங்களில் நடிக்க ஆரம்பித்தாராம்..
அதன் பின்னர் தான் சஞ்சய் தத்தை அவர் சந்தித்ததும் காதல் மலர்ந்ததும் திருமணம் செய்துகொண்டதும் எல்லாம் நடந்தது... அந்த நேரத்தில் மான்யதா அப்படி இப்படி நடித்த 'பி' கிரேடு படம் ஒன்று வெளியானது.. ஆனால் சுதாரித்துக்கொண்ட சஞ்சய் தத் அந்தப்படத்தின் மொத்த ரைட்சையும் 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கி மேற்கொண்டு அதை திரையிடாமல் தடுத்துவிட்டாராம். மேலும் மார்க்கெட்டில் உலவிய அந்தப்படங்களின் சிடிக்கள் அனைத்தையும் சேகரித்து அழித்தும் விட்டாராம்.. ஆனால் இப்போது அவர் கவலையெல்லாம், யாராவது இணையதளத்தில் அந்தப்படத்தை வெளியிட்டால் என்ன செய்வது என்பது தானாம். 57 வயதில் சஞ்சய் தத்துக்கு வந்த கவலையை பார்த்தீர்களா..?