'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
வேட்டை படத்தை யு.டி.,விக்கு விற்று லாபம் கண்ட தயாரிப்பாளர் கம் இயக்குனர் லிங்குசாமி, உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என மீண்டும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளாராம்.
ஏற்கவனே கமல்ஹாசனை வைத்து திரைப்படம் எடுக்க முயற்சி செய்து அது முடியாமல் போனது. அப்போது மிஸ் ஆன அந்த லிங்க்கை தற்போது மீண்டும் புதுப்பித்துக் கொள்ள தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறாராம் லிங்கு. இதற்காக பிரமாண்ட இயக்குனருடன் கூட்டு சேர்ந்து, அவர் தயாரிப்பில் தனது கனவை நிறைவேற்றவும், விஸ்வரூபத்தில் பிசியாக இருக்கும் கமல்ஹாசன், அதை முடித்தவுடன் அவருக்காகவே தான் தயாரித்துள்ள ஸ்க்ரிப்டை சொல்லி ஓகே வாங்கவும் லிங்கு எடுத்து வரும் முயற்சிகள்.. அடடடா.. அப்பப்பப்பபா. என கோலிவுட் வட்டாரத்தை கிசுகிசுக்க வைத்திருக்கிறதாக தெரிகிறது.
விஸ்வரூபத்திற்குப் பிறகு வேட்டை இயக்குனருடன் கமல் கூட்டு சேர்ந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!