ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ர.இன்பசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'. தம்பி ராமையாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடித்து அறிமுகமாகும் இந்த படம் இம்மாதம் 16-ஆம் தேதி வெளியாகவிருந்தது. தம்பி ராமய்யாவின் மகன் நடித்த படம் என்றாலும் தியேட்டர் கிடைக்க வேண்டுமே?
16 ஆம் தேதி அன்று வேறு சில படங்கள் ரிலீஸ் ஆக இருந்ததால் அதாகப்பட்டது மகா ஜனங்களே படத்துக்கு 50 தியேட்டர்கள் கூட கிடைக்கவில்லை. எனவே இந்த படத்தின் ரிலீஸை 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்கள்.
அன்றைக்கு கௌதம் கார்த்திக் நடித்த 'இவன் தந்திரன்' படம் வெளியாக உள்ளது. கண்ணன் இயக்கத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ள 'இவன் தந்திரன்' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
இந்தப் படத்தை ஜி. தனஞ்சயன் வெளியிடவிருப்பதால் கூடுதல் தியேட்டர்களை குறிவைத்திருக்கிறார். எனவே இந்த முறையும் 'அதாகப்பட்டது மகாஜனங்களே' தள்ளிப்போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது.