மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
கடந்த நான்கு வருடங்களுக்கு முன் மலையாளத்தில் வெளியான படம் தான் 'த்ரிஷ்யம்'. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த இந்தப்படம் அடைந்த வெற்றி பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. த்ரில்லர் பாணியில் உருவாகியிருந்த இந்தப்படத்தின் கதை எந்த மொழிக்கும் பொருந்தக்கூடிய எந்த மொழி மக்களும் தங்கள் வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்த்துக்கொள்ளும் வகையிலான படம்.. அதனால் தான் இந்தப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் ரீமேக் ஆனது. இந்தி தவிர மற்ற மொழிகளில் வெற்றியும் பெற்றது.
இந்தநிலையில் இந்தப்படத்தை சீனாவில் ரிலீஸ் செய்யும் வேலைகள் நடைபெற்று வருகின்றதாம். சமீபகாலமாக இந்திய படங்களுக்கு சீனாவில் கிடைக்கும் வரவேற்பு அதிகாமாகி வருகிறது.. அமீர்கானின் 'தங்கல்' சீனாவில் வசூல் சாதனை படைத்து வருகிறது.. அடுத்ததாக 'பாகுபலி-2' சீனாவில் பிரமாண்டமாக ரிலீஸாக இருக்கிறது.. அதனால் த்ரிஷ்யம் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகிறாராம் படத்தின் தயாரிப்பாளரான ஆண்டனி பெரும்பாவூர்.